டாஸ்மாக் குடோனை பார் உரிமையாளர்கள் முற்றுகை

நெல்லையில் டாஸ்மாக் குடோனை பார் உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-01-03 18:57 GMT
நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 183 டாஸ்மாக் கடை பார்கள் உள்ளன. இதில் 89 பார்கள் தான் தற்போது இயங்கி வருகின்றன. இந்த பார்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏலம் நடந்தது.

இந்தநிலையில் தமிழ் மாநில பார் உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை, நிர்வாகிகள் பாக்கியம், முத்துசரவணன், பிச்சை ராஜ் மற்றும் பார் உரிமையாளர்கள் நேற்று நெல்லை முன்னீர்பள்ளத்தில் உள்ள அரசு டாஸ்மாக் குடோனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  நெல்லை, தென்காசி மாவட்டங்களில் டாஸ்மாக் பார்களுக்கு முறையாக டெண்டர் விட வேண்டும். ஏற்கனவே பார் எடுத்தவர்களுக்கும், கட்டிட உரிமை உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி அதிகாரியிடம் மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

இந்த முற்றுகை போராட்டத்தையொட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், வெங்கடேஷ், பாத்திமா மர்லின் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்