வேலூர்
வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் மோட்டூர் பகுதியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின்பேரில் பறக்கும்படை தாசில்தார் கோட்டீஸ்வரன் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை அந்த பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ் சாலையையொட்டி காணப்பட்ட கட்டிடத்தின் அருகே ஏராளமான பிளாஸ்டிக் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேல்பகுதியில் இருந்த பிளாஸ்டிக் மூட்டைகளில் மணலும், அடிப்பகுதியில் 40 பிளாஸ்டிக் மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசியும் இருந்தது.
இதனையடுத்து 2 டன் ரேஷன் அரிசியை பறக்கும்படையினர் பறிமுதல் செய்து பதுக்கியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.