வேலூர் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு

வேலூர் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு

Update: 2022-01-03 18:27 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கான முன்எச்சரிக்கை நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. 

நேற்று வெளியான பரிசோதனையின் முடிவில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். பொதுமக்கள் அலட்சிய போக்கை கடைப்பிடிக்காமல் கொரோனா தொற்று தடுப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்