ஆற்காட்டில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஆற்காட்டில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஆற்காடு
ஆற்காட்டில் தோப்பு கானா பகுதியிலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து் வட்ட வழங்கல் அலுவலர் சந்தியா வருவாய் ஆய்வாளர் மாதவன் ஆகியோர் தோப்பு கானா பகுதிக்கு விரைந்தனர். அங்கு ஒதுக்குப்புறமான இடத்தில் 40 மூட்டைகள் இருந்தன. அதிகாரிகள் அதனை சோதனை செய்ய சென்றபோது அங்கிருந்த 2 பேர் ஓட்டம் பிடித்தனர்.
அந்த மூட்டைகளை சோதனை செய்தபோது 3 டன் ரேஷன் அரிசி இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து ஆற்காடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.