மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 337 மனுக்கள் பெறப்பட்டன
திருப்பத்தூரில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 337 மனுக்கள் பெறப்பட்டன.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது.
இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி 337 மனுகள் அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.