அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 2 வாலிபர்கள் கைது
தூசி அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தூசி
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே ஐயங்கார் குளம் கூட்டு சாலையில் காஞ்சீபுரத்தில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த காஞ்சீபுரம் மாவட்டம் புஞ்சை அரசன் தாங்கல் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சுகுமார் (வயது 27) மற்றும் கிருஷ்ணகிரி தாலுகா காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் (26) ஆகிய இருவரையும், அரசு பஸ் டிரைவர் காண்டீபன் என்பவர் மெதுவாக செல்லுமாறு கூறியிருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் கற்களால் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து உள்ளனர். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தியதும், அவரை இருவரும் அசிங்கமாக திட்டிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.
இதுகுறித்து பஸ் டிரைவர் காண்டீபன் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்குப்பதிவு செய்து சுகுமார், பாலமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்.