சரமாரியாக தாக்கி காவலாளி கொலை

சக்கிமங்கலம் அருகே சரமாரியாக தாக்கி காவலாளியை கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.;

Update: 2022-01-03 17:49 GMT
புதூர், 
சக்கிமங்கலம் அருகே சரமாரியாக தாக்கி காவலாளியை கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
ரியல் எஸ்டேட் பகுதி
மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் கிராமம் அருகே கார் சேரி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 50). காவலாளியான இவர் இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில்  சக்கிமங்கலம் கல்மேடு ஏ.கே. நகர் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் இடத்தில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த  மர்ம கும்பல் திடீரென கண்ணனை சரமாரியாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது.
 இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்று கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், துணை சூப்பி ரண்டு காட்வின் ஜெகதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். 
கண்காணிப்பு
இந்தபகுதியில் நேற்று முன்தினம் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கொலை  சம்பவம் அந்த பகுதியில் பரபரப்ப ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேம ராக்களை போலீசார் ஆய்வு செய்து  கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். 

மேலும் செய்திகள்