பட்டதாரி பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

நாகை அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பட்டதாரி பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-03 17:35 GMT
வெளிப்பாளையம்:
நாகை அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பட்டதாரி பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பட்டதாரி பெண் கர்ப்பம்
நாகை மாவட்டம் திருமருகல் அருகே தேவதாதிநல்லூரை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 27). இவரும், 21 வயதான பட்டதாரி பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணிடம், பிரபாகரன் தனிமையில் இருந்துள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார்.  
இதையடுத்து அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பலமுறை பிரபாகரனிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். 
வாலிபர் கைது
இதைத்தொடர்ந்து பிரபாகரனின் பெற்றோரிடம் தான் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தபோது அவர்கள் கர்ப்பத்தை கலைத்து விடும்படி கூறியதாக அந்த பெண் நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர். 
இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்