நெற்பயிருக்குள் கிடந்த மலைப்பாம்பு
செந்துறை அருகே நெற்பயிருக்குள் கிடந்த மலைப்பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்தனர்.
செந்துறை:
செந்துறை அருகே உள்ள சேத்தூர் அய்யாபட்டியை சேர்ந்தவர் பழனியாண்டி. இவர், தனது வயலில் நெல் பயிரிட்டுள்ளார். அதற்குள் மலைப்பாம்பு ஒன்று கிடந்தது. இதுகுறித்து நத்தம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் நிலைய அலுவலர் திருக்கோல்நாதர் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் வயலுக்குள் கிடந்த 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு படையினர் உயிருடன் பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு, வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.