வடமாநில பெண்தற்கொலை

வடமாநில பெண்தற்கொலை

Update: 2022-01-03 16:27 GMT
வடமாநில பெண்தற்கொலை
வால்பாறை

வால்பாறை சக்தி எஸ்டேட்டில் தோட்ட தொழிலாளியாக  குடும்பத்தோடு தங்கி இருந்து வேலை செய்து வந்தவர் திலிப்கியர்வார். இவரது மனைவி ரீனா குமாரி (வயது20). இவர்ளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில்  ரீனா தனது கணவரிடம் சொந்த ஊரான ஜார்கண்டுக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டுள்ளார்.அதற்கு திலிப்கியர்வார் இப்போது செலவுக்கு பணம் இல்லை பின்னர் அழைத்து சொல்வதாக கூறியுள்ளார்.

 இதனால் மனமுடைந்த ரீனாகுமாரி வீட்டுக்குள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தகவலறிந்ததும்,காடம்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ரீனாகுமாரியின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். 

இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆவதால்,வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் விசாரணை நடத்தினார். இதனையடுத்து ஆர்.டி.ஓ. விசாரணை  நடைபெறுகிறது.
-----------------

மேலும் செய்திகள்