வால்பாறையில் தொழிலாளி தற்கொலை

வால்பாறையில் தொழிலாளி தற்கொலை;

Update: 2022-01-03 16:18 GMT
வால்பாறையில் தொழிலாளி தற்கொலை
வால்பாறை
வால்பாறை அருகில் உள்ள தோனிமுடி எஸ்டேட் இரண்டாவது பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிவேலு (வயது54) தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் குடிபோதையில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.இதனால் இவரது மனைவி அருகில் உள்ள தனது தங்கையின் வீட்டுக்கு சென்றுவிட்டார். 

இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டுக்கு சென்று பார்த்த போது ஜோதிவேலு வீட்டில் தூக்கு தற்கொலை செய்தது தெரியவந்தது.  இது குறித்து தகவல் அறிந்ததும், முடீஸ் போலீசார் விரைந்து வந்து, ஜோதிவேலு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்