ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது
ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
தேவதானப்பட்டி:
ஜெயமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் தேவதானப்பட்டி அருகே உள்ள மேல்மங்கலத்தில் ரோந்து சென்றனர். அப்போது கையில் சாக்குடன் சென்று கொண்டு இருந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர்கள் மேல்மங்கலத்தை சேர்ந்த நாகபாண்டி (வயது 35), பெரியசாமி (35) என்பதும், சாக்கில் வீச்சரிவாள், பட்டாக்கத்தி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.