வெளிநாடு செல்ல முடியாத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

வெளிநாடு செல்ல முடியாத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-01-03 14:59 GMT
தேனி:
தேனி அருகே கொடுவிலார்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி மகன் தாமோதரன் (வயது 25). என்ஜினீயருக்கு படித்துள்ளார். இவருடைய தாயார் சூர்யா, பெங்களூரு மற்றும் தேனி அருகே லட்சுமிபுரம் ஆகிய இடங்களில் நாப்கின் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் தாமோதரன் வேலை பார்த்து வந்தார். 
இந்நிலையில், தாமோதரன் வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்க்க விரும்புவதாக தனது தாயாரிடம் கூறி வந்தார். ஆனால், தங்களின் சொந்த நிறுவனத்தை பார்த்துக் கொள்ளுமாறு அவருடைய தாயார் கூறினார். இதனால், வெளிநாடு செல்ல முடியாத விரக்தியில் அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்