காஞ்சீபுரம் துணை மின்நிலையத்தில் நாளை மின்தடை

காஞ்சீபுரம் துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது.;

Update: 2022-01-03 13:42 GMT
இதனால் அந்த நேரத்தில் காஞ்சீபுரம் நகரம் மற்றும் அதை ஒட்டியுள்ள சில பகுதிகளான பாலியர்மேடு, திருகாலிமேடு, வெள்ளைகேட், காரைப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம் மற்றும் வேளியூர் துணை மின்நிலையங்களை சேர்ந்த கிராமங்களிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

இத்தகவலை காஞ்சீபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் ஏ.சரவணதங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்