காணாமல் போன ரூ.15 லட்சம் மதிப்பிலான 110 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் காணாமல் போன ரூ.15 லட்சம் மதிப்பிலான 110 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

Update: 2022-01-03 11:34 GMT
மயிலாடுதுறை:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் காணாமல் போன ரூ.15 லட்சம் மதிப்பிலான 110 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 

காணாமல் போன செல்போன்கள்

மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவின்பேரில் மாவட்டத்தின் எல்லைக்குள் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிப்பதற்காக மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையில் சைபர் கிரைம் போலீசார் சுதாகர், ரவிச்சந்திரன், எழிலன் ஆகியோர் கொண்ட சிறப்பு படை அமைக்கப்பட்டது. 
இந்த சிறப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 110 செல்போன்கள் கண்டறியப்பட்டது. 

உரியவர்களிடம் ஒப்படைப்பு

இந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். அப்போது அவர், செல்போன்களை பாதுகாப்பாக எடுத்துச்செல்வது குறித்தும், காணாமல் போன செல்போன் குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிப்பது குறித்தும் விளக்கி பேசினார். 
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வசந்தராஜ் (மயிலாடுதுறை), லாமேக் (சீர்காழி), மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சதீஸ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்