ராஜபாளையம் அணி கோப்பையை வென்றது
விருதுநகரில் நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மாவட்ட அளவிலான ஆக்கி போட்டியில் ராஜபாளையம் அணி கோப்பையை வென்றது.
விருதுநகர்,
விருதுநகரில் நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மாவட்ட அளவிலான ஆக்கி போட்டியில் ராஜபாளையம் அணி கோப்பையை வென்றது.
ஆக்கி போட்டி
விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளியில் பழைய மாணவர் சங்கம், ரெட் ரோஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவற்றின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி நடைபெற்றது.
இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 15 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப்போட்டிக்கு விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை அணிகள் தகுதி பெற்றன. பின்னர் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ராஜபாளையம் அணி, விருதுநகர் ரெட் ரோஸ் கிளப் அணியை வென்று வெற்றிக்கோப்பையை தட்டிச் சென்றது.
பரிசளிப்பு விழா
இதைத்தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பள்ளியின் செயலாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள், பழைய மாணவர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு பரிசுகள், கோப்பைகளை வழங்கினர்.
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாநில ஆக்கி சங்க உறுப்பினரும், பள்ளியின் உடற்கல்வி இயக்குனருமான ரமேஷ் செய்திருந்தார்.