மேலும் 29 பேருக்கு தொற்று: கொரோனாவுக்கு 2 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள். மேலும் 29 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.;
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 30 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் நேற்று மேலும் 29 பேருக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 561 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 26 பேர் குணமடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த 37 வயதான ஆண் ஒருவரும், 50 வயதான ஆண் ஒருவரும் கொரோனா பாதிப்புக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் இவர்கள் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,731 ஆக அதிகரித்துள்ளது.