வெவ்வேறு விபத்துகளில் ஆசிரியர் உள்பட 2 பேர் பலி
பெத்தநாயக்கன்பாளையம் அருகே நடந்த வெவ்வேறு விபத்துகளில் ஆசிரியர் உள்பட 2 பேர் பலியாகினர்.
பெத்தநாயக்கன்பாளையம்:
பெத்தநாயக்கன்பாளையம் அருகே நடந்த வெவ்வேறு விபத்துகளில் ஆசிரியர் உள்பட 2 பேர் பலியாகினர்.
ஆசிரியர் பலி
பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஏத்தாப்பூர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 56). இவர் கருமந்துறை மலைவாழ் மக்கள் உண்டு உறைவிடப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். மனோகரன் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது புத்திரகவுண்டம்பாளையத்தில் எதிரே வந்த ரிக் வண்டி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மனோகரன் பலத்த காயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
தனியார் பஸ் மோதியது
பெத்தநாயக்கன்பாளையம் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் காந்தி (36). இவர் வீட்டில் இருந்து ஆத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பெத்தநாயக்கன்பாளையத்தில் தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் காந்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த 2 விபத்துகள் குறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.