53 சிறப்பு பஸ்கள் இயக்கம்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்கு வந்தவர்கள் குமரியில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல 53 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Update: 2022-01-02 20:35 GMT
நாகர்கோவில்:
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்கு வந்தவர்கள் குமரியில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல 53 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சிறப்பு பஸ்கள்
குமரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் வெளியூர்களில் படித்து வருகிறார்கள். அதே போல் அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் வெளியூர்களில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை கொண்டாட சொந்த ஊருக்கு வந்தனர்.
விடுமுறை முடிந்ததை தொடர்ந்து மாணவ-மாணவிகள் மற்றும் அரசு-தனியார் ஊழியர்கள் வெளியூர்களுக்கு நேற்று புறப்பட்டனர். இதை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 53 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
பயணிகள் கூட்டம் அலைமோதல்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள் தவிர சென்னைக்கு 9 பஸ்களும், மதுரைக்கு 25 பஸ்களும், கோவைக்கு 6 பஸ்களும், தஞ்சைக்கு ஒரு சிறப்பு பஸ்சும் இயக்கப்பட்டது. இதே போல அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில் பணிமனையில் இருந்து சென்னைக்கு 2 பஸ்களும், பெங்களூரு மற்றும் கோவைக்கு தலா ஒரு பஸ்களும் இயக்கப்பட்டன. இதனால் பஸ்களில் இடம் பிடிக்க பயணிகள் கூட்டம் அலைமோதியது.
மார்த்தாண்டம் பணிமனையில் இருந்து சென்னைக்கு 5 பஸ்களும், ஈரோடு, கோவை, ஓசூருக்கு தலா ஒரு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.  இதுதவிர கேரள மாநிலம் திருவனந்தபுரம் பணிமனையில் இருந்து சென்னைக்கு ஒரு சிறப்பு பஸ்சும் இயக்கப்பட்டது.

மேலும் செய்திகள்