கோவில் கோபுர கலசம் திருட்டு

கோவில் கோபுர கலசம் திருட்டு

Update: 2022-01-02 20:27 GMT
நாங்குநேரி :
நாங்குநேரி திசையன்விளை ரோடு அருகே ஏமன்குளத்தை அடுத்து பொத்தையடி ஆலங்குளத்தில் மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. மலை மீது அமைந்திருக்கும் இக்கோவிலில் செண்பகராமன்நல்லூரைச் சேர்ந்த சீனிவாசன் (45) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் பூஜையை முடித்து விட்டு சென்றவர் மறுநாள் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலில் கோபுரத்தின் மேல் இருந்த இரு கலசங்கள் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவற்றின் மதிப்பு சுமார் ரூ.15 ஆயிரம் இருக்கும். இதுகுறித்து சீனிவாசன் நாங்குநேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபுர கலசத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்