நெல்லை: கொலை மிரட்டல்- வாலிபர் கைது

கொலை மிரட்டல் வாலிபர் கைது

Update: 2022-01-02 20:24 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள பாளையஞ்செட்டி குளத்தைச் சேர்ந்தவர் ஜெஸ்டின் கோபிநாத் (வயது 32). இவர் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த பட்டன் என்பவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். இதனை பட்டனும், அவருடைய மனைவியும் கண்டித்ததாக கூறப்படுகிறது. உடனே ஜெஸ்டின் கோபிநாத், அவர்கள் 2 பேருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் வழக்குப்பதிவு செய்து ஜெஸ்டின் கோபிநாத்தை கைது செய்தார்.

மேலும் செய்திகள்