டாஸ்மாக் கடையை உடைத்து 110 மதுபாட்டில்கள் திருட்டு
சத்திரப்பட்டியில் டாஸ்மாக் கடையை உடைத்து 110 மதுபாட்டில்கள் திருட்டு நடைபெற்றது.;
புதூர்,
மதுைர சத்திரப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை வழக்கம் போல இரவு பூட்டி விட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். மறுநாள் காலை டாஸ்மாக் கடையை ஊழியர்கள் திறக்க வந்தனர். கடையின் பூட்டு, கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்ற போது, கடையில் வைக்கப்பட்டு இருந்த 110 மதுபாட்டில்கள் திருடு போய் இருந்தது. இது குறித்து டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் நீதிமாறன்(வயது 52) சத்திரப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்திபாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் வழக்குபதிவு செய்து மதுபாட்டில்களை திருடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.