பஸ் மோதி இளம்பெண் பலி
ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதியதில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மலைக்கோட்டை
திருச்சி கள்ளர் வீதியை சேர்ந்தவர் சங்கர்பாபு. இவருடைய மகள் நந்தினி (வயது 18). பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். புத்தாண்டான நேற்று முன்தினம் காலை இவர், தனது தாயாருடன் ஸ்கூட்டரில் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திருச்சி காந்திமார்க்கெட் வெங்காயமண்டி அருகே அவர்கள் வந்தபோது, அந்த வழியாக இனாம்குளத்தூரில் இருந்து சத்திரம் பஸ்நிலையம் நோக்கி சென்ற அரசு பஸ் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நந்தினியின் இடுப்பில் பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிசைக்காக தென்னூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய தாயார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
டிரைவர் மீது வழக்கு
இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகவேல், விபத்துக்கு காரணமாக அரசு பஸ்சை பறிமுதல் செய்தார். பின்னர் இதுகுறித்த புகாரின்பேரில் அரசு பஸ் டிரைவரான கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த செந்தில்குமார் (34) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.