குமரியில் 29 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
குமரியில் 29 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமாி மாவட்டத்தில் இன்று (அதாவது நேற்று) 512 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் மொத்தம் 29 ஆயிரத்து 660 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 14 லட்சத்து 4 ஆயிரத்து 170 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் 11 லட்சத்து 80 ஆயிரத்து 607 பேருக்கு முதல் கட்ட தடுப்பூசியும், 8 லட்சத்து 66 ஆயிரத்து 726 பேருக்கு 2-ம் கட்ட தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.