ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த வியாபாரி பலி

ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த வியாபாரி பலி

Update: 2022-01-02 19:17 GMT
அருமனை:
அருமனை அருகே மாத்தூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் கிளிட்டஸ் (வயது46), வியாபாரி. பழைய பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வந்தார். இவர் மேல்புறம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு சென்று பழைய இரும்பு பொருட்களை வாங்குவது வழக்கம். 
நேற்று முன்தினம் வழக்கம் போல் கிளிட்டஸ் பழைய பொருட்களை வாங்கிவிட்டு தனது நண்பருடன் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார்.  
மேல்புறம் சந்தை அருகில் சாலையில் வளைவான பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கிளிட்டஸ் எதிர்பாராத விதமாக ஆட்டோவில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் நின்றவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில் கிளிட்டஸ் பரிதாபமாக இறந்தார். 
இந்த விபத்து குறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த கிளிட்டசுக்கு மேரி என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்