‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்;

Update: 2022-01-02 19:13 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை 

 தஞ்சை மாவட்டம் மானாங்கோரையை அடுத்த வயலூர்-ராமாபுரம் பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் அந்த வழியாக பள்ளிகளுக்கு சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகள் கீழே விழுந்து காயம் அடைந்து விடுகின்றனர். எனவே பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-தமிழன் பிரபு, தஞ்சை.

பாதாள சாக்கடை மூடி சீரமைக்கப்படுமா?

தஞ்சை கீழராஜவீதி பகுதி கொண்டிராஜ பாளையம் அருகே உள்ள சாலையில் பாதாள சாக்கடை குழியின் மூடி சேதமடைந்து உள்ளது. இதனால் பாதாள சாக்கடை குழி திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் திறந்து கிடக்கும் குழியினால் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் திறந்த நிலையில் இருக்கும் பாதாள சாக்கடை குழியை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?      
-பொதுமக்கள், கீழராஜவீதி.

மேலும் செய்திகள்