கலசபாக்கம்
கலசபாக்கத்தை அடுத்த சிறுகிளாம்பாடிையச் சேர்ந்தவர் சங்கர் (வயது 45). இவர் நாயுடுமங்கலம் கூட்ரோட்டில் உள்ள பேக்கரியில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேலையை முடித்து விட்டு சற்று முன்கூட்டிேய சங்கர் தனது வீட்டுக்கு புறப்பட்டார்.
மாலை 6.30 மணியளவில் அந்த வழியாக பஸ் இல்லாததால் சிறிது தூரம் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த நார்த்தாம்பூண்டி தில்லைநகரை சேர்ந்த பிரசாந்த் என்பவரிடம் ‘லிப்ட்’ கேட்டு ஏறி வந்தார்.
நார்த்தாம்பூண்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் வரும்போது, அந்த வழியாக எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று திடீெரன பிரசாந்தின் மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
அதில் சங்கருக்கு தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். மோட்டார்சைக்கிைள ஓட்டி வந்த பிரசாந்த் படுகாயம் அடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை ெபற்று வருகிறார். விபத்து குறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.