2,501 வடையுடன் சிறப்பு பூஜை

பாலவீர ஆஞ்சநேயருக்கு 2,501 வடையுடன் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2022-01-02 18:10 GMT
திருப்புவனம், 
திருப்புவனத்தில் அழகிய மணவாள ரெங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இங்கு அனுமன் ஜெயந்திவிழா நடை பெற்றது. கோவிலின் நுழைவு பகுதியில் வலது புறம் தனி சன்னதியில் கிழக்கு பார்த்து அருள் பாலிக்கிறார்.பால வீர ஆஞ்சநேயருக்கு 2,501 வடைமாலை சாத்தப்பட்டது. மேலும் வெற்றிலை மாலை, பேப்பர் மாலை, துளசி மாலையும் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ரெங்கநாதபெருமாள்-ஆண்டாளுக்கு பூஜை நடைபெற்ற பின்பு ஆஞ்சநேயருக்கு ஆராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்