மலைப்பாம்பு பிடிபட்டது

வாத்தை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது

Update: 2022-01-02 18:05 GMT
சிங்கம்புணரி, 
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அண்ணாநகர் பகுதியில் ரவி என்பவருக்கு சொந்தமான இடத்தில் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது அங்கு மலைப்பாம்பு ஒன்று வாத்தை விழுங்கிக் கொண்டிருந்தது. இதுகுறித்து உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்து பிரான்மலை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்