கரை ஒதுங்கிய ஆண் பிணம்
நாயக்கர் குப்பம் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆண் பிணத்தை போலீசாா் மீட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவெண்காடு:
நாயக்கர் குப்பம் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆண் பிணத்தை போலீசாா் மீட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கரை ஒதுங்கிய ஆண் பிணம் மீட்பு
திருவெண்காடு அருகே நாயக்கர் குப்பம் கடற்கரையில் நேற்று அதிகாலை ஆண் பிணம் கரை ஒதுங்கி இருப்பதாக பெருந்தோட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மோகனா ஜெய்சங்கர், திருவெண்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையில் போலீசார் விரைந்து சென்று கரை ஒதுங்கிய உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கடற்கரையில் பிணமாக ஒதுங்கிய நபர் சீர்காழி பிடாரி வடக்கு வீதியை சேர்ந்த ரத்னம் மகன் முத்து (வயது 47) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், முத்து கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.