அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை 1008 வடை மாலை சாத்தி வழிபாடு

அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் 1008 வடை மாலை சாத்தி வழிபாடு நடந்தது.

Update: 2022-01-02 17:35 GMT
கடலூர், 

1008 வடை மாலை

அனுமன் ஜெயந்தியையொட்டி கடலூர் செம்மண்டலத்தில் உள்ள சாந்த ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. காலையில் அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு அலங்கார தீபாராதனை நடை பெற்றது. இதையடுத்து கோவில் முன்பு உள்ள 26 அடி உயரமுள்ள ஆஞ்சநேயருக்கு 1008 வடை மாலை சாத்தியும், துளசி மாலை, பூமாலையும் சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பெண்கள் தீபம் ஏற்றியும் ஆஞ்சநேயரை வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை சிறப்பு முத்தங்கி சேவை செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வீரஆஞ்சநேயர்கோவில்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வீரஆஞ்சநேயர் கோவிலிலும் அனுமன் ஜெயந்தியையொட்டிசிறப்பு பூஜை நடந் தது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு பால், தயிர், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பெண்கள், இளம்பெண்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். அதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் கடலூர் பகுதியில் உள்ள பல்வேறு ஆஞ்சநேயர் கோவில்களிலும் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்