ஆட்டுக்குட்டியை கொன்ற மலைப்பாம்பு பிடிபட்டது
ஆட்டுக்குட்டியை கொன்ற மலைப்பாம்பு பிடிபட்டது
பேரூர்
தொண்டாமுத்தூர் அருகே வண்டிக்காரனூரில் உள்ள மணல்காடு பகுதியில், குப்பனூரை சேர்ந்த தொழிலாளர்கள் பட்டி அமைத்து, ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் அந்த பகுதியில் ஆடுகள் மேய்ச்சலில் ஈடுபட்டு இருந்தன. அப்போது புதரில் இருந்து 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு வெளியே வந்தது. தொடர்ந்து 6 மாத பெண் ஆட்டுக்குட்டியை கவ்வி பிடித்து, உடலை சுற்றியது.
அதன் பிடியில் இருந்து விடுபட ஆட்டுக்குட்டி போராடியது. எனினும் அது முடியாமல் போனதால், சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது. இதை கண்ட தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், லாவகமாக மலைப்பாம்பை பிடித்தனர். தொடர்ந்து தாளியூர் அருகே யானை மடுவு பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.