வடமாநிலத்தினர் உள்பட 4 பேர் கைது

நாகூர் அருகே நாற்காலி வாங்கிய போது ஏற்பட்ட தகராறில் வடமாநிலத்தினர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-01-02 16:47 GMT
நாகூர்:
நாகூர் அருகே நாற்காலி வாங்கிய போது ஏற்பட்ட தகராறில் வடமாநிலத்தவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தகராறு
மத்திய பிரதேச மாநிலம் மன்சூர் மாவட்டத்தை சேர்ந்த ஈஸ்வர் பஞ்சாரா (வயது26), இவருடன் மத்திய பிரதேசத்தை சோ்ந்த 40-க்கும் மேற்பட்டவர்கள் தெத்தி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்னர். இவர்கள் நாகூர், நாகை, திருவாரூர், வேளாங்கண்ணி, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று பிளாஸ்டிக் நாற்காலிகளை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வடமாநிலத்தவர்கள் நாகூர் கிழக்கு கடற்கரை சாலையில் நாற்காலிகளை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நாகூர் தெத்தி சிவன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் மகன் முருகராஜ் (26), தெத்தி தெற்கு தெருவை சேர்ந்த சாமிநாதன் மகன் வீரமணி (29) மற்றும் இவர்களது நண்பர்கள் வந்து நாற்காலியை விலை பேசி உள்ளனர். இதை தொடர்ந்து வடமாநிலத்தவர்களுக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
4 பேர் கைது
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முருகராஜ், வீரமணி மற்றும் இவர்களது நண்பர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்து எங்களை தாக்கி ரூ.6 லட்சத்து 35 ஆயிரம் மற்றும் 6 செல்போன்களையும், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் நாற்காலிகளையும், 2 லோடு ஆட்டோக்களையும் அடித்து சேதப்படுத்தி விட்டு தப்பி சென்று விட்டதாக ஈஸ்வர் பஞ்சாரா நாகூர் போலீசி்ல் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகராஜ், வீரமணி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் பலரை வலைவீசி தேடி வருகின்றனர். இதேபோல தெத்தி பகுதியை சேர்ந்த பார்த்திபன் கொடுத்த புகாரின் பேரில் நாற்காலி வாங்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாத்தில் வடமாநிலத்தவர்கள் எங்களை தாக்க முயன்றதாக தெரிவித்திருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடமாநிலத்தை சேர்ந்த ஈஸ்வர் பஞ்சாரா, சந்து ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்