நிமோனியா காய்ச்சலுக்கு 7 மாத பெண் குழந்தை பலி

நிமோனியா காய்ச்சலுக்கு 7 மாத பெண் குழந்தை பலி

Update: 2022-01-02 16:37 GMT
கோவை

கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் அருண் பிரகாஷ். இவருடைய 7 மாத பெண் குழந்தை பரணிகாஸ்ரீ. இந்த குழந்தைக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதையடுத்து அந்த குழந்தையை சிகிச்சைக்காக நேற்று முன்தினம் பெற்றோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அந்த குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நிமோனியா காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அந்த குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் நிமோனியா காய்ச்சலுக்கு 7 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்