மொரப்பூர் அருகே கல்லூரி மாணவி கடத்தல் தந்தை மகன் மீது வழக்கு

மொரப்பூர் அருகே கல்லூரி மாணவியை கடத்தியதாக தந்தை மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-01-02 16:35 GMT
மொரப்பூர்:
மொரப்பூர் அருகே உள்ள கீழ்மொரப்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி கோவை அரசு மகளிர் கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று கடைக்கு சென்ற மாணவியை அதேபகுதியை சேர்ந்த கோகுலக்கண்ணன் என்பவர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து கேட்டபோது மாணவியின் பெற்றோருக்கு கோகுலக்கண்ணனின் தந்தை முருகன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீசார் கோகுலக்கண்ணன், முருகன் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்