மத்தூர் அருகே குடும்பத்தகராறில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

மத்தூர் அருகே குடும்பத்தகராறில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2022-01-02 22:04 IST
மத்தூர்:
மத்தூர் அருகே குடும்பத்தகராறில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
போலீஸ்காரர் 
தர்மபுரி மாவட்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 28). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள 7-ம் நிலை பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி திவ்யா என்ற மனைவியும், கவிசிக் (7), ரிஷ்வந்த் (5) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். 
இவர் மனைவி குழந்தைகளுடன் மத்தூர் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் பழனிசாமி சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். 
தற்கொலை
இந்தநிலையில் நேற்று காலையில் திவ்யா எழுந்து பார்த்த போது பழனிசாமி வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். இதைப்பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் பழனிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்