ரெயில் மோதி 2 மாடுகள் பலி
திண்டுக்கல் அருகே ரெயில் மோதி 2 மாடுகள் பலியாகின.
திண்டுக்கல்:
நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 11.15 மணிக்கு திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது. திண்டுக்கல்லை அடுத்த மொட்டணம்பட்டி ரெயில்வே கேட் அருகே ரெயில் வந்தபோது தண்டவாளத்தில் குறுக்காக 2 மாடுகள் சென்றன.
அப்போது ரெயில் மோதியதில் 2 மாடுகளும் சம்பவ இடத்திலேயே பலியாகின. இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே மதுரை-கோவை பாசஞ்சர் ரெயில் நேற்று மாலை திண்டுக்கல் ராமர்காலனி அருகே சென்றது.
அப்போது தண்டவாளத்தில் மேய்ந்து கொண்டிருந்த மயில் ரெயிலில் அடிபட்டு இறந்தது.