பாச்சலூர் பள்ளி மாணவி கருகி பலியான வழக்கில் மாணவர்கள் உள்பட 50 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை
பாச்சலூர் பள்ளி மாணவி கருகி பலியான வழக்கில் மாணவர்கள் உள்பட 50 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
திண்டுக்கல்:
பாச்சலூர் பள்ளி மாணவி கருகி பலியான வழக்கில் மாணவர்கள் உள்பட 50 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
பாச்சலூர் மாணவி பலி
கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பெரும்பாறையை அடுத்த பாச்சலூரை சேர்ந்தவர் சத்யராஜ். இவருடைய மகள் பிரித்திகா (வயது 10). இவள், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் கடந்த மாதம் 15-ந்தேதி பிரித்திகா வழக்கம் போல் பள்ளிக்கு சென்றாள்.
மேலும் காலை சுமார் 11 மணிக்கு வகுப்பறையில் இருந்து வெளியே சென்ற அவள் திரும்பி வரவில்லை. இதனால் சக மாணவிகள் தேடி சென்ற போது, பள்ளி வளாகத்தில் பிரித்திகா உடல் கருகி கிடந்தாள். இதுபற்றி தகவல் அறிந்த சத்யராஜ் பள்ளிக்கு ஓடிவந்து, கருகி கிடந்த மகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே அவள் பரிதாபமாக உயிரிழந்தாள்.
சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
இதற்கிடையே மாணவி கொலை செய்யப்பட்டதாக பெற்றோர் புகார் அளித்தனர். இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். எனினும் யாரும் கைது செய்யப்படவில்லை. இதனால் மாணவியின் உறவினர்கள், பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாணவி பலியான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்கள், திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாணவி மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி படித்த பள்ளி, மேலும் கருகி கிடந்த இடம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.
50 பேரிடம் விசாரணை
அதோடு மாணவியின் பெற்றோர், உறவினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இதுவரை சுமார் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருப்பதாகவும், மேலும் சிலரிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.