இலவச மின்சாரம் பெற விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-01-02 14:13 GMT
தமிழக அரசு அறிவித்துள்ள ஒரு லட்சம் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்ட பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, கன்னிகைப்பேர், ராமஞ்சேரி, பூண்டி, புல்லரம்பாக்கம், மெய்யூர், எறையூர், வெள்ளாத்துக்கோட்டை, பாலவாக்கம், போந்தவாக்கம், மாம்பாக்கம், பென்னலூர்பேட்டை, ஆத்துப்பாக்கம், தண்டலம், முக்கரம்பாக்கம், செங்கரை, ஏனம்பாக்கம், அத்திவாக்கம், பண்டிகாவனூர், மஞ்சங்காரணை, கொப்பூர், பாப்பரம்பாக்கம், சேலை, ஏகாட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து இலவச விவசாய மின் இணைப்பு பெற பதிவு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 

இதையொட்டி நாளை (திங்கட்கிழமை) லால்பகதூர் சாஸ்திரி தெரு, பெரியகுப்பம், மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ள விவசாயிகளுக்கான சிறப்பு முகாமில் கலந்துகொண்டு விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்