பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு
பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி உள்ளது. இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல கடந்த மே மாதம் முதல் வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அருவிக்கு வரும் தண்ணீர் வாய்க்கால் வழியாக அப்பகுதியில் உள்ள பல்வேறு கண்மாய்களை சென்றடைகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.