மதுபாட்டில்- புகையிலை பொருட்கள் விற்ற 20 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தில் மதுபாட்டில், புகையிலை பொருட்கள் விற்றதாக 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் போலீசார் புத்தாண்டு தினத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர்கள் மீது 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 16 பேரும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 பேரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 26 புகையிலைப் பாக்கெட்டுகள் மற்றும் 68 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.