சென்னை துறைமுகம் அருகே சாலையில் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி

சென்னை துறைமுகம் அருகே சாலையில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது.;

Update:2022-01-02 15:19 IST
சென்னை துறைமுகத்தில் இருந்து திருவொற்றியூரில் உள்ள ஒரு சரக்கு பெட்டக நிலையத்துக்கு 26 டன் எடையுள்ள எந்திரங்களை ஏற்றிக்கொண்டு துறைமுக வாயில் வழியாக வந்த கன்டெய்னர் லாரி, திடீரென்று சாலையில் கவிழ்ந்தது.

இதுபற்றி தகவலறிந்து வந்த காசிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சாலையில் கவிழ்ந்து கிடந்த கன்டெய்னர் லாரியை மீட்டனர். இதில் கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் ரவிசந்திரன் (வயது 54) படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்