ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் ரேஷன் அரிசி கடத்திய 230 பேர் கைது- 54 வாகனங்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் ரேஷன் அரிசி கடத்திய 230 பேரை போலீசார் கைது செய்தனர். ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய 54 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update:2022-01-02 03:30 IST
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் ரேஷன் அரிசி கடத்திய 230 பேரை போலீசார் கைது செய்தனர். ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய 54 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரேஷன் அரிசி
ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், ரகசிய தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்று ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்கிறார்கள்.
கர்நாடகா மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக மாநில எல்லையில் போலீசார் அடிக்கடி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
54 வாகனங்கள்
கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரேஷன் அரிசி கடத்தியதாக மொத்தம் 194 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 230 பேர் கைது செய்யப்பட்டனர். ரேஷன் அரிசியை கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 54 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரேஷன் அரிசி கடத்தலில் அதிகமாக ஈடுபட்டு வந்த ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேபோல் கலப்பட டீசல் விற்றதாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து 3 ஆயிரத்து 200 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்