மைசூரு-கோவா இடையே, கூடுதல் விமானம் இயக்க நடவடிக்கை
பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மைசூரு-கோவா இடையே கூடுதல் விமானம் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
மைசூரு: பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மைசூரு-கோவா இடையே கூடுதல் விமானம் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
மக்கள் வேண்டுகோள்
மைசூரு மண்டஹள்ளி பகுதியில் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, சென்னை, கோவா, ஐதராபாத் கொச்சி ஆகிய பகுதிகளுக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் விமானங்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.
இந்த நிலையில் மைசூரு-கோவா இடையே ஏற்கனவே ஒரு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்துக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் மைசூரு-கோவா இடையே கூடுதல் விமானம் இயக்க வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
இதுகுறித்து மைசூரு மண்டஹள்ளி விமான நிலைய நிர்வாக அதிகாரி மஞ்சுநாத் கூறியதாவது:-
கூடுதல் விமானம் இயக்க...
மைசூருவில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. மைசூரு-கோவா இடையே இயக்கப்படும் விமானத்துக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. இதனால் மக்கள், மைசூரு-கோவா இடையே கூடுதல் விமானம் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மைசூரு-கோவா இடையே கூடுதல் விமானம் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த மாத இறுதிக்குள் மைசூரு-கோவா இடையே கூடுதல் விமானம் இயக்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தாலும் விமான பயணிகள் எண்ணிக்கை குறையவில்லை. சென்னை, ஐதராபாத், கொச்சி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் அந்த பகுதிக்கும் கூடுதல் விமானம் இயக்க பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.