நெல்லை அருகே 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை:
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்தவர் துரை (வயது 26). மானூர் அருகே உள்ள மூவிருந்தாளியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (34). இவர்கள் மீது தேவர்குளம், சீவலப்பேரி போலீஸ் நிலையங்களில் அடிதடி, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இதனால் இவர்கள் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இவர்களால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சீவலப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பெருமாள் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று ஜெயக்குமார், துரை ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஜெயக்குமார், துரை ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான உத்தரவை இன்ஸ்பெக்டர் பெருமாள் நேற்று பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் ஒப்படைத்தார்.