சேரன்மாதேவி:
சேரன்மாதேவி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகில் சந்தேகப்படுமாறு நின்றவரிடம் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், அவர் வீரவநல்லூர் அருகே புதுக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பதும், மணல் திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.