போலீசாரின் முயற்சியால் புதுப்பொலிவு பெற்ற ரெயில்வே மேம்பாலம்
ரெயில்வே மேம்பாலம் புதுப்பொலிவு பெற்றது.
தென்காசி:
தென்காசியில் ெரயில்வே மேம்பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அந்த மேம்பாலத்தில் உள்ள சுற்றுச்சுவர் பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பொலிவிழந்து காணப்பட்டது.
இதை மாற்ற தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, சுற்றுச்சுவரில் இருந்த விளம்பரம், சுவரொட்டிகள் அகற்றப்பட்டு, பல வர்ணங்களை பூசி, மனதை கவரும் வகையில் பல்வேறு வாசகங்களும் எழுதி அழகுப்படுத்தி உள்ளனர். இதனால் ரெயில்வே மேம்பாலம் புதுப்ெபாலிவு பெற்றுள்ளது. அந்த மேம்பாலத்தை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.