அதிக பனிப்பொழிவினால் மல்லிைக விளைச்சல் பாதிப்பு
அதிக பனிப்பொழிவினால் மல்லிைக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. பூவிற்கு உரிய விைல கிடைக்காததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.;
காரியாபட்டி,
அதிக பனிப்பொழிவினால் மல்லிைக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. பூவிற்கு உரிய விைல கிடைக்காததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
பனிப்பொழிவு
காரியாபட்டி தாலுகா தோப்பூர், கழுவனச்சேரி, எஸ். கல்லுப்பட்டி, புல்லூர், ஆவியூர், அரசகுளம், குரண்டி, மாங்குளம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது அதிகமாக பனிப்பொழிவு இருப்பதால் மல்லிகை பூ விளைச்சல் மிகவும் குறைந்துள்ளது. அதிக அளவில் நோய் தாக்கி செடிகள் உள்ள பூக்கள் முழுவதும் உதிர்ந்து வருகிறது. சென்ற ஆண்டு இதே மாதம் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.3 ஆயிரம் விற்பனை ஆனது. ஆனால் இந்த ஆண்டு ஒரு கிலோ மல்லிகை ரூ.1,600 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பணியாளர்களுக்கு சம்பளம்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
காரியாபட்டி தாலுகாவில் எண்ணற்ற கிராமங்களில் மல்லிகை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த பகுதியில் கடும் பனிப்பொழிவு உள்ளது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஏக்கரில் மல்லிகை பூ பறிக்க வேண்டும் என்றால் குறைந்தது 10 நபர்கள் தேவைப்படுகிறது. இந்த 10 நபர்களுக்கும் ரூ.3 ஆயிரம் வரை சம்பளம் வழங்க வேண்டியுள்ளது.
இந்தநிலையில் மகசூல் குறைவால் ஒரு ஏக்கருக்கு கிடைக்கும் வருவாய் அந்த பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதிலேயே சரியாகி விடுகிறது.
விவசாயிகள் கவலை
வேலைக்கு வரும் ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு மட்டுமே விளைச்சல் இருந்து வருவதால் எந்தவித பலனும் கிடைக்காமல் மல்லிகைப்பூ விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
காரியாபட்டி பகுதியில் விளையும் மல்லிகை பூக்கள் தினமும் விமானம் மூலம் பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று வந்தது. காரியாபட்டி மல்லிகை பூ என்றால் மதுரை மார்க்கெட்டில் தனி விலை உண்டு. ஆனால் தற்போது விளைச்சல் இல்லாததால் மல்லிகை பூ விவசாயிகள் மதுரை மார்க்கெட்டிற்கு எடுத்து செல்வதை விடுத்து அருப்புக்கோட்டையில் கொண்டு போய் விற்பனை செய்கின்றனர். எனவே விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.