செடிகளில் விளைந்த பருத்தியை பறிக்க முடியாமல் விவசாயிகள் வேதனை

செடிகளில் விளைந்த பருத்தியை பறிக்க முடியாமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

Update: 2022-01-01 19:56 GMT
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் பெரும்பாலானோர் விவசாய தொழிலை நம்பியே பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் மானாவாரி நிலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பருத்தி மற்றும் மக்காக்சோளம் பயிரிட்டுள்ளனர். கடந்த மாதம் பெய்த தொடர் கனமழையால் வயலில் மழைநீர் தேங்கி பருத்தி செடியில் வைத்திருந்த சப்பைகள் கொட்டி பெருமளவு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதையும் தாண்டி ஓரளவு விளைந்த பருத்தியை செடியில் இருந்து பறிக்க முடியாமல் கடந்த 3 நாட்களாக விட்டு, விட்டு பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். எனவே பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடந்த சில நாட்களாக மனு கொடுத்து வந்த நிலையில், வயலில் விளைந்த குறைவான பருத்தியையும் வீட்டுக்குக் கொண்டுவர முடியாமல் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து வேதனையில் உள்ளனர். எனவே விவசாயிகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதே அனைத்து விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்