புத்தாண்டையொட்டி ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு மது விற்பனை

குமரி மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு மது விற்பனையானது.

Update: 2022-01-01 18:50 GMT
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு மது விற்பனையானது.
டாஸ்மாக் கடைகள்
குமரி மாவட்டத்தில் 113 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இதில் 53 மதுக்கடைகளில் பார் வசதி உண்டு. மாவட்டம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை மது விற்பனை நடைபெறுவது வழக்கம்.
அதே சமயம் பண்டிகை நாட்களில் கூடுதலாக மது விற்பனை நடைபெறும். அதிலும் தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் இந்த விற்பனை கூடுதலாக இருக்கும்.
ரூ.4 கோடிக்கு விற்பனை
அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு ஆங்கில புத்தாண்டு பிறந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
நேற்று முன்தினம் ஒரு நாளில் மட்டும் ரூ.4 கோடியே 7 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.32 லட்சம் கூடுதலாகும். இதன்மூலம் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் ரூ.101  கோடிக்கு மது விற்பனை நடத்துள்ளது. 
இதில் அதிகபட்சமாக கிறிஸ்துமசுக்கு முந்தைய நாளான 24-ந் தேதியன்று மட்டும் ரூ.5 கோடியே 52 லட்சத்து 730-க்கு மது விற்பனையானது.
இந்த தகவலை டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்